உயர் தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை இன்று!

க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.

2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் 3, 269 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12.10 வரை பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நடைபெறவுள்ளது.

இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது போன பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு 2023 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் போது, தமது பாடசாலைகளின் ஊடாக மீள விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Please follow and like us: