SLPP தலைவர் பதவியிலிருந்து ஜீ.எல்.பீரிஸ் நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக தற்போது இரண்டு முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Please follow and like us: