இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் மேலும் அதிகரிப்பு

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 2.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதியாகும் போது அதிகரிப்பு பதிவானதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 1.9 பில்லியன் டொலராக நிலவிய வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மாதம் 0.2 பில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.

இதில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1.4 பில்லியன் பணமாற்ற ஒப்பந்தமும் அடங்கும்.

Please follow and like us: