எரிபொருள் QR குறீட்டு முறை – புதிதாக வெளியான தகவல்  

எரிபொருளுக்கான  QR   குறியீட்டு முறைமை 3 அல்லது 4 மாதங்களில் நீக்கப்படும் என்று விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கான உண்மையான காரணம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் இல்லை என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையில் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன.

அவற்றுக்கு மேலதிகமாக இன்னும் சில நிறுவனங்களை இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போதும்,  QR  குறியீட்டு முறைமை காரணமாக அந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றன.

அதன்காரணமாகவே  QR குறியீட்டு முறைமையை இரத்து செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: