எரிபொருள் QR குறியீடு நீக்கப்படும் காலம் அறிவிப்பு

நாட்டில் நிலவி வரும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, தற்போது QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

இதனால் பல அசௌகரியங்கள் இருந்தாலும் கூட, கடந்தகாலங்களில் நிலவிய எரிபொருள் வரிசை இல்லாமல் போயுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 3 மாதங்களுள் QR குறியீடு நீக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஹிரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியொன்றில் வைத்து கூறியுள்ளார்.

எரிபொருள் கொள்வனவில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் ஓரளவுக்கு தணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் எரிபொருள் ஒதுக்கம் மற்றும் கியூஆர் குறியீடு போன்ற நடைமுறைகளை படிப்படியாக நீக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: