எரிபொருள் ஒதுக்கமும் விலையும் – அமைச்சின் விளக்கம்

ஏப்ரல் மாதம் எரிபொருள் விலை சூத்திர அமுலாக்கலின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்த சில கருத்துகள்.

  • அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் பயன் பொது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும்.
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை வாரத்திற்கு 5 லீற்றரில் இருந்து நாளொன்றுக்கு 5 லீற்றராக அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், 80,000 வேட்பாளர்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியை ஏற்பாடு செய்வதற்கு 6 மாதங்கள் ஆகும்.
  •  அது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கு, அவை சார்ந்த அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம்.
Please follow and like us: