பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார்.
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு வயது 79. துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் நவாஷ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். 2008ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Please follow and like us: