CBSL இன் முன்னாள் ஆளுநர் காலமானார்  

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் எச்.பி. திஸாநாயக்க காலமானார்.

பூதவுடல் நுகேகொடை – மிரிஹான, பழைய கொட்டாவ வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இன்று மிரிஹான பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ள சில விடயங்களாவன.

எச்.பி. திஸாநாயக்க தனது 85 ஆவது வயதில் மார்ச் 05 ஆம் திகதி காலமானார். எச்.பி. திஸாநாயக்க இலங்கை மத்திய வங்கியின் ஒன்பதாவது ஆளுநராக 1992 ஜூலை 1 முதல் 1995 நவம்பர் 15 வரை பணியாற்றினார். எச்.பி. திஸாநாயக்க ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், சுங்கப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றினார்.

எச்.பி. திஸாநாயக்க இலங்கை மத்திய வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1995 இலிருந்து 1998 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

Please follow and like us: