வரலாற்றில் முதன் முறையாக காலிமுகத்திடலில் நடக்கும் அதிசயம்  

இலங்கையின் காலி முகத்திடல் உள்ளிட்ட மேற்குக் கரையோரப் பகுதிகளில் அதிகளவான கடல் ஆமைகள் முட்டையிடுகின்றன.

வழமைக்கு மாறாக அதிகளவான கடலாமைகள் இலங்கை கரைகளில் முட்டையிடுவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார தெரிவித்தார்.

“ஒவ்வொரு ஆண்டும் ஆமைகள் முட்டையிடுவதற்காக கடலோரப் பகுதிக்கு வருவது வழக்கம்.

இருப்பினும், காலி முகத்திடல் கரையோரப் பகுதியில் தற்போது முட்டையிடும் போக்கு அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

மேற்கு கடற்கரையோரங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் கருதுகிறார்.

Please follow and like us: