முதற் தடவையாக விமான விபத்துகள் குறித்து ஆராய குழு நியமனம்  

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாட்டின் வான்பரப்பில் ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் ஏழு விமான விபத்து புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த புலனாய்வாளர்கள் விமான விபத்துக்களின் துல்லியமான விவரங்களை அடையாளம் காணவும், அத்தகைய சம்பவங்களின் மூலக் காரணத்தை ஆராய்வதற்கும், இலங்கையின் வான்வெளியில் எதிர்காலத்தில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.

இந்த முயற்சியானது இலங்கை விமான சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமையும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Please follow and like us: