உள்ளூராட்சித் தேர்தல் குறித்து 23 க்குள் இறுதி தீர்மானம் !

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள தடை குறித்து திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திறைசேரி செயலாளர் விளக்கியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட திகதிகளில் வாக்குசீட்டுகளை வழங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: