அடுத்த வாரம் இலங்கை வரும் உரக் கப்பல்

36,000 மெட்ரிக் டன் இரசாயன உரம் அடங்கிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளது.

அதன்படி இந்த கப்பல் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரத்தை (TSP) விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Please follow and like us: