முதன்மை வட்டி வீதங்களில் வீழ்ச்சி | வங்கிக் கடன் வட்டியும் குறையும் சாத்தியம்

வங்கிகளுக்கான முதன்மை வட்டி வீதங்கள் 71 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெய்லிமிரர் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இவ்வாரம் வங்கிகளின் முதன்மை வட்டிவீதம் 22.74% ஆக வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதன்மை வட்டிவீதத்தை அடிப்படையாக கொண்டே வங்கிகள் வெவ்வேறு வகையான கடன்கள், கடன் அட்டைகள், அடைவு போன்றவற்றுக்கான வட்டிவீதங்களைத் தீர்மானிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி இம்மாத ஆரம்பத்தில் துணை நில் வைப்பு வட்டி வீதங்களை 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரித்திருந்த போதும், சந்தை மனநிலைமைக்கு அமைய வங்கிகளின் முதன்மை கடன் வட்டி வீதம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நிதி ஆய்வாளர்களின் தகவல்படி இவ்வருட இறுதிக்குள் வட்டி வீதங்கள் 12-15% ஆக குறைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

Please follow and like us: