மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி

மரக்கறி விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

கேப்பிட்டிபொல மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக குறைந்துள்ளது.

மெனிங் சந்தையில் போஞ்சி மொத்த விற்பனை விலை ஒரு கிலோகிராம் 330 முதல் 360 ரூபாய் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கிலோகிராம் கெரட்டின் மொத்த விலை 150 ரூபாவிற்கும் குறைவாக பதிவானதுடன், ஒரு கிலோகிராம் பூசணிக்காய் மொத்த விற்பனை விலையும் 70 ரூபாவிற்கு மேல் குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையும் 160 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்பட்டதுடன், உள்ளூர் உருளைக்கிழங்குகள் 200 முதல் 240 ரூபா வரையில் மெனிங் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் மேலும் தெரிவித்தனர்.

Please follow and like us: