இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்களில் விலைகள் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பழவகைகள் தற்போது சந்தையில் அதிகம் கிடைக்கின்றன.

இதனால் அவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஆனால் உள்நாட்டில் உற்பத்தியாகின்ற வாழை, அன்னாசி, பப்பாசி போன்ற பழவகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: