மாசி 5, 2023

எலினா ரிபாகினா, அசரன்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரிபாகினா அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார். இதில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அசரன்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Please follow and like us: