தேர்தல் தாமதம் – பாதிக்கப்பட்ட 3000 அரச பணியாளர்களுக்கு நிவாரணமில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக, தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அரச பணியாளர்கள் சம்பளமில்லாத விடுப்பு எடுத்துள்ளனர்.
மார்ச் 9ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்பதால், குறித்த வேட்பாளர்களில் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.
தேர்தல் செயல்முறை தொடர்வதன் காரணமாக அவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ள போதும், இந்த வேட்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.