மாசி 5, 2023

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று

கல்வியாண்டு 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது.

இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.

அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: