கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இவ்வாரம் நில அதிர்வு ஏற்படலாம்

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இந்த வாரம் 8 மெக்னிடியுட் அளவான நில அதிர்வு ஒன்று ஏற்படவிருப்பதாக, இந்தியாவின் புவிசரிதவியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.
அவ்வாறான ஒரு நில அதிர்வு அங்கு ஏற்படுமாக இருந்தால், அது இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலும் பதிவாகும் என்று, இலங்கையின் புவிசரிதவியல் நிபுணரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைந்துள்ள புவித்தகட்டின் எல்லைப் பகுதியிலேயே இந்தியாவின் இமயமலைத் தொடர் உள்ளிட்ட வடமாநிலங்கள் சில அமைந்துள்ளன.
அங்கு நில அதிர்வு ஏற்பட்டால் அது இலங்கையிலும் உணரப்படும்.
2020 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட நில அதிர்வு இலங்கையிலும் 5 மெக்னிடியுட் அளவில் உணரப்பட்டது.
இலங்கைக்கு அடியில் இன்னுமொரு நிலத்தடும் உள்ளது – அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.
இவ்வாரம் இந்தியாவில் ஏற்படுகின்ற நில அதிர்வு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உணரப்பட்டாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் கடற்களாலும், சிறந்த அடித்தளத்தைக் கொண்டதாகவும் உள்ளன.
எனவே பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் நில அதிர்வை உணரக்கூடியதாக இருக்கும்.