இலங்கைக்கு நில அதிர்வு எச்சரிக்கை

இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவற்றில் குறிப்பாக இமயமலைத்தொடரை அண்டிய பகுதிகளில் அடுத்தவாரம் பாரிய நில அதிர்வு ஒன்று ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு அங்கு நில அதிர்வு ஒன்று ஏற்படுமாக இருந்தால், அது இலங்கையில் குறிப்பாக கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புவிசரிதவியல் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஏற்பட்டிருந்த நில அதிர்வின் தாக்கங்கள் கொழும்பில் உணரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Please follow and like us: