வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் (10) புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் 3.5 மற்றும் 3 ரிக்டர் அளவுகோலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: