மருந்து தட்டுப்பாடு மத்தியி்ல் புற்றுநோய் கட்டியை சத்திரகிசிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

தெல்தெனிய மருத்துவமனையின் மருத்துவர்கள் புற்றுநோய் கட்டியொன்றை சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

67 வயது புற்றுநோய் கட்டியையே தெல்தெனிய மருத்துவர்கள் சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மருந்து தட்டுப்பாட்டிற்கு மத்தியில் இந்த சத்திரகிசிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்து மற்றும் கதிர்வீச்சு கிசிச்சை மூலம் குணப்படுத்தவேண்டிய நிலையிலேயே சத்திரகிசிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர்.

சத்திரகிசிச்சை நிபுணர் கோசல சோமரட்ண மிகவும் நெருக்கடியான சூழலில் தனது குழுவினருடன் இணைந்து இந்த சத்திரகிசிச்சையை முன்னெடுத்துள்ளார்.

உணவுக்குழாய் வழியாக என்டோஸ்கோபி கருவியை செலுத்தியபோது இந்த ஆபத்தான நோய் கண்டறியப்பட்டது, அவருக்கு மருந்துகள் மூலம் கிசிச்சை அளித்திருந்தால் அது சிறப்பானதாக இருந்திருக்கும் ஆனால் மருந்துகள் பற்றாக்குறையாக காணப்பட்டதால் நாங்கள் சத்திரகிசிச்சையை  முன்னெடுக்க தீர்மானித்தோம் எங்கள் மருத்துவமனையில் லபரஸ்கோபி சாதனம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் என்டஸ்கோபி சாதனம் இருந்தது நாங்கள் அதனை  பயன்படுத்தவேண்டிய நிலையில் இருந்தோம் நாங்கள் அறிந்தவகையில் உலகில் நாங்கள் மாத்திரம் இவ்வாறான கிசிச்சையை செய்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: