ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 19 முதுநிலை மருத்துவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் பணியில் சேருமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மருத்துவர்கள் ஹரி விக்னேஷ், ஸ்ருதி உள்ளிட்ட 19 பேர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு தாங்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், மருத்துவப் படிப்பில் நிபுணத்துவம் பெற்ற தங்களை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களை நியமித்திருப்பது தவறானது என்றும் வாதிடப்பட்டது.

Please follow and like us: