இரண்டு வகையான பல்லிகள் கண்டுபிடிப்பு

இலங்கையின் ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு சொந்தமான  புதிய இரண்டு வகை பல்லிகளை வெற்றிகரமாக கண்டு பிடித்துள்ளது.

இந்த இரண்டு பல்லி இனங்களும் முறையே ஜெயவீரவின் பல்லி (Cnemaspis jayaweerai) மற்றும் நாணயக்காரவின் பல்லி (Cnemaspis nanayakkarai)  என பெயரிடப்பட்டுள்ளன.

இந்தப் பல்லிகள் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள கலகிரிய மலையிலும் அம்பறை மாவட்டத்திலுள்ள எதகல மலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பல்லி இனங்களும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிகப்புப் பட்டியலின் கீழ் அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சுரஞ்சன் கருணாரத்ன, கனிஷ்க உக்குவெல, அன்ஸ்லாம் டி சில்வா, மஜிந்த மடவல, மாதவ பொதேஜு, தினேஷ் மஹகே, எரான் பௌர் மற்றும் நிக்கோலோ போயர்கோவ் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊர்வன நிபுணர்கள் குழு இந்த ஆய்வில் பங்கேற்றது.

Please follow and like us: