புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து  

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இதை அறிவித்தார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இம்மாதம் 23ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளமை குறி்பபிடத்தக்கது.

Please follow and like us: