உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த தீர்மானம் நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நாளையதினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை சந்திப்பை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான நிதியை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவையொட்டி, அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சு மா அதிபர் உள்ளிட்டத் தரப்பினருடன் நாளை கலந்துரையாடப்படும்.

இதன் போது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இனி தடையின்றி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: