இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து டேவிட் வோர்னர் நீக்கம்

அவுஸ்திரேலியாவின் ஆரம்ப ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் போர்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் (சிஏ) செவ்வாய்க்கிழமை இதனை உறுதிப்படுத்தியது.

டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வோர்னர் காயத்துக்கு ஆளானார்.

போட்டியின் இடையே அவருக்கு பதிலாக மெட் ரென்சாவ் பதிலீடு செய்யப்பட்டார்.

X-கதிர் பரிசோதனையின் பின்னர் வோர்னருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்தூர் மற்றும் அகமதாபாத்தில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

எவ்வாறாயினும், மார்ச் மாதத்திற்குப் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு வோர்னர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us: