தேர்தல் – அஞ்சல் வாக்களிப்பு திகதி  

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவது உசிதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

தற்போது அஞ்சல் வாக்களிப்புகளுக்கான பொருத்தமான தினங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் அஞ்சல் வாக்குப்பதிவுகளை நடத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையிலான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த திகதிகள் எதுவும் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please follow and like us: