இலங்கையில் ஆபத்தான வாகனங்களை மீளப்பெறும் விநியோகஸ்த்தர்கள்

கடந்த வாரம் இலங்கையின் முன்னணி விஞ்ஞானி ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தவறுள்ள காற்றுப் பைகள் (Airbag) கொண்ட சில வாகனங்களை திரும்பப் பெறுவதாக உள்ளூர் கார் விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
37 வயதான குறித்த விஞ்ஞானி, பெப்ரவரி 3 ஆம் திகதி ஹொரணை, கோனபொலயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.
அவரது கார் சாலைத் தடையின் கொன்கிரீட் கம்பத்தில் மோதி கவிழ்ந்த போது, செயல்படுத்தப்பட்ட காற்றுப் பையின் உலோகத் துண்டு ஒன்று தாக்கியமையே அவரது மரணத்திற்கு காரணமாகும்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மறைந்த விஞ்ஞானி பயன்படுத்தியதை ஒத்த வாகனங்களை, உள்ளூர் கார் டீலர்கள் காற்று பை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
மீளப்பெறப்படும் வாகன வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
Civic :ES4/ES8/FD1/FD4/FB1
CRV : RD1/RD5/RE2/ RE3/RE4
Accord:CM5/ CL5/CL7/CF8/CF9
Fit/ Jazz GP1/GP2/GP3 /GP4/GE6/ GD1/GD8/GD6
City:GM2/ 3A3
Insight:ZE2/ZE3
Stream : RN3
Integra:DC2
Odyssey: RA3
Corolla 141 : ZRE 141R- AE## / ZZE141R- AE# / CE140R- AEH#A
Yaris : NCP92R-BE### / NCP42R- BE## / NCP90R- BE##