யாழ்ப்பாணத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் – 8 மாடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சியில் பரவ ஆரம்பித்த மாடுகளுக்கான பெரிய அம்மை நோய், யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு ஏற்பட்ட பெரிய அம்மை நோய் காரணமாக 8 மாடுகள் உயிரிழந்ததுடன், 15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது.
Please follow and like us: