நிக்கரகுவா அரச எதிர்ப்பாளர்களான 94 பேரின் பிரஜாவுரிமையை நீதிமன்றம் நீக்கியது

வெளிநாடுகளில் வசிக்கும், அரச எதிர்ப்பாளர்களான மேலும் 94 பேரின் பிரஜாவுரிமையை நிக்கரகுவா நீதிமன்றமொன்று நீக்கியுள்ளது. ‘தந்தைநாட்டின் துரோகிகள்’ எனவும் அவர்கள் நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிக்கரகுவாவின் புகழ்பெற்ற நூலாசிரியரும், முன்னாள் உப ஜனாதிபதியுமான சேர்ஜியா ரமீரெஸும் மேற்படி எதிர்ப்பாளர்களில் ஒருவர் என செய்தி வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க ஆரய் சில்வியோ பயஸ், மற்றும் ஜனாதிபதி டேனியல் ஒட்டேகாவி;ன முன்னாள் சகாக்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
நிக்கரகுவா மக்களின் அமைதி, இறையாண்மை, சுதந்திரம், சுயநிர்யம் சீர்குலைப்பதற்காக கிரிமினல் நடவடிக்கைளில் குற்றம்சுமத்தப்பட்ட நபர்கள் ஈடுபட்டனர் என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ஏர்னஸ்ட்டோ றொட்றிகஸ் மேஜியா தீர்ப்பை அறிவிக்கும்பொது கூறியுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவின் ஜனாதிபதியாக டேனியல் ஒர்டேகா நீண்டகாலமாக பதவி வகிக்கிறார். அவரை சர்வாதிகாரி என பலர் விமர்சிக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டு முதல் ஓர்டேகாவின் ஆட்சிக்கு எதிராக பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினரை ஜனாதிபதி ஒர்டோகா ஈடுபடுத்தினார். பெரும் எண்ணிக்கையான எதிர்க்கட்சி பிரமுகர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்டிருந்த 222 பேரை கடந்த வாரம் ஓர்டேகாவின் அரசாங்கம் சிறையலிருந்து விடுவித்து அவர்களை நாடு கடத்தியது. அவர்கள் விசேட விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதுடன் அவர்களின் பிரஜாவுரிமைகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்க் கருத்துடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.