ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தனர்.
எனினும் இந்த போராட்டத்தினை மக்களின் இயல்புநிலை பாதிக்கும் வகையில் நடத்தக் கூடாது என்று கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 7 அமைப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றவர்கள் யாரும், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத்திடல் மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளுக்குச் செல்ல இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us: