சர்வதேச மன்னிப்பு சபையின் கண்டனம்  

இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன் விளைவாக எதிர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்

மற்றும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புசபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரையா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என்று ஹரீந்திரினி கொரையா சுட்டிக்காட்டியுள்ளார்.

Please follow and like us: