தேசபந்து தென்னகோனுக்கு எதிரான முறைப்பாடு

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப்  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதிவானுக்கு  இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குறித்த  முறைப்பாட்டை விசாரணை செய்வதற்கும் இடைக்கால தடை விதித்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு  14 நாட்களுக்கு செல்லுபடியாகும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (பெப் 16) பரிசீலிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Please follow and like us: