கபொத சாதாரண தர பரீட்சை மேலும் காலத்தாமதமாகும்

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் தாமதித்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் மேலும் காலத்தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரீட்சைகள் நடத்தப்படும் காலம் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: