சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்பு

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக  சாய்ந்தமருதை சேர்ந்த டொக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், இன்று (16) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார். 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் யூ.எல்.எம். நியாஸ் உள்ளிட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், மாநகர சுகாதாரப்பிரிவினூடாக பல்வேறு சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், பாவனைக்கு உதவாத வகையில் ஒதுக்கப்பட்ட இயந்திரங்களை மீள் பழுது பார்ப்பினூடாக மக்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: