மாசி 5, 2023

யாழில் சில கும்பல்களுக்கு இடையே மோதல்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ‘ஆவா’ கும்பலுக்கும் ’கேணி’ கும்பலுக்கும் இடையில் சுன்னாகம் பகுதியில் வாகனங்களை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்தியில் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் கார் மற்றும் கெப் வண்டியுடன் செவ்வாய்க்கிழமை (24) நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதலில் கார் மற்றும் கால் டாக்சி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தன.

இரு வாகனங்கள் மோதியதில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில், அவ்விரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வீதியில் பயணித்த பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மோதலில் ஈடுபட்டவர்கள் ஆவா கும்பல் மற்றும் கேணி கும்பலை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும், இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Please follow and like us: