இந்தியாவின் அயல் நாடுகளிற்கான சீனாவின் கடன்கள் – வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்தும்!  

இந்தியாவின் அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்துவதற்காக பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளது.

மத்திய தென்னாசியாவிற்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படலாம் என நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாக்கிஸ்தானிற்கான சீனாவின் கடன்கள் குறித்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்த நாடுகள் தங்கள் சொந்ததீர்மானங்களை எடுப்பதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இந்தியாவுடனும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடனும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: