இலங்கை குறித்து சீனா மற்றும் அமெரிக்ககா கலந்துரையாடல்

இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் G20 நாடுகளின் நிதியமைச்சர்களின் சந்திப்பையொட்டி, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான தூதுக்குழு அளவிலான கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது.
கடன் நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்கும் சீனாவின் பின்தங்கிய கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Please follow and like us: