ரயில் கழிவறையில் குழந்தை – விசாரிக்கச் சென்று சிக்கலில் விழுந்த பொலிஸ் அதிகாரி

கோட்டை ரயில் நிலையத்தில், மட்டக்களப்பு ரயில் கழிவறையில் குழந்தையொன்றை கைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அந்த குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கடந்த தினம் பண்டாரவளை மற்றும் கொஸ்லாந்தையில் கைது செய்யப்பட்டனர்.
கைதான பெண் பண்டாரவளை பொலிஸ் தலைமை நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படும் நேரம் காணொளி பதிவு செய்யப்பட்டமையும் சர்ச்சையாகியுள்ளது.
இதனூடாக பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ஒருவரை விசாரணை செய்யும் போது அவரது தனியுரிமை மீறப்பட்டு சங்கடத்துக்கு உள்ளாக்கப்பட்டமை, பெண்கள் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட வேண்டிய முறைமை மீறப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த பொலிஸ் பரிசோதகர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.