இலங்கை மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கிய புதிய வரப்பிரசாதம்

வர்த்தக வங்கிகள் ஏற்றுமதி வருமானத்தில், மத்திய வங்கியில் சரணடையச் செய்ய வேண்டிய 25% கட்டாய தொகை பெப்ரவரி 27 முதல் 15 வீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ‘சந்தையால் இயக்கப்படும் நாணய மாற்று செயல்பாடுகளுக்கு’ உதவும் என்று மத்திய வங்கி, வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
வர்த்தக வங்கிகள், ஏற்றுமதியாளர்கள், வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து வாங்கும் சராசரி விலையில் டொலரை மத்திய வங்கிக்கு மீண்டும் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் நாணய பெறுமதி மிதப்பில் விடப்பட்ட போதும், அதன் தோல்விக்கு இந்த கட்டாய சரணடைதல் தொகை ஒரு காரணம் என குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.