வேட்பாளர்களான அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் கிடைக்கும் சாத்தியம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு தேர்தல் தாமதத்தின் போது அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் அரச நிர்வாக செயலாளருக்கு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஊடாக சுமார் 3000 அரச ஊழியர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு இதற்காக சம்பளமற்ற விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தேர்தல் தாமதித்துள்ள போதும் சமபளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

Please follow and like us: