பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட முடியும்

எதிர்வரும் ஜுன் மாதம் பேருந்து கட்டணத்தை குறைக்கப்பட முடியும் என்று தனியார் பேருந்து உரிமையாளாகள் சங்கமும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க சம்மேளனமும் தெரிவித்துள்ளன.
எனினும் அதற்கு எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் அந்த சங்கங்களின் பிரதானிகளான கெமுனு விஜயரத்ன மற்றும் அஞ்சன பிரியஞ்சித் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
டொலர் விலை வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.
அதற்கு ஏற்றாற்போல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு குறைக்கப்பட்டால் நிச்சயமாக ஜுன் மாதம் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டண சீர்த்திருத்தத்தின் போது கட்டணம் குறைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.