சிவனொளிபாத மலைக்கு சென்று திரும்பிய பேருந்து விபத்து – 3பேர் பலி

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
சம்பவத்தில் மேலும் 26 பேர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு – ரத்மலானை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகைக்காக சென்றவர்கள், நல்லத்தணியிலிருந்து கினிகத்தேனை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த போது, நோர்டன்பிரிஜ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
Please follow and like us: