பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை  

களனிப் பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது 6 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

Please follow and like us: