பூகம்பத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடல் துருக்கியில் அடக்கம்

துருக்கியில் பூகம்பத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடல் அன்டக்யா நகரில் அடக்கம் செய்யப்பட்டது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த பகுதியின் சுகாதார அதிகாரிகளின் விதிமுறைகளிற்கு ஏற்ப உடல்  அடக்கம் செய்யப்பட்டது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த இலங்கையர்கள் 16 பேர் குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு துருக்கிக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கி அதிகாரிகளுடன் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் தூதரகத்தை தொடர்புகொண்டு தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: