மாசி 5, 2023

கறுப்புப் பட்டி போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (24) தமது எதிர்ப்பைத் தெரிவித்து, கறுப்பு பட்டி அணிந்து கடமையை மேற்கொள்கின்றனர்.

அரச வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்து, அதற்குரிய வளங்களை சீரான வழங்குமாறு கோரியும், வரி என்ற பெயரில் அரசாங்கத்தால் பறிக்கப்படும் சம்பள பணத்துக்கு எதிராக இந்தக் கறுப்பு பட்டி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதும் அரசாங்கத்தால் நிர்வகிக்கத் தவறிய சரியான மருந்து பொருட்களுக்கான வழங்களுக்கு எதிராக, அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறும் இயக்கமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Please follow and like us: