தங்க விலையில் பெரும் சரிவு – வியாபாரிகள் நெருக்கடியில்

டொலர் பெறுமதியில் ஏற்படுகின்ற சடுதியான வீழ்ச்சியின் காரணமாக தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலத்துள் தங்கத்தின் விலை சுமார் 30,000 ரூபா வரையில் சரிவடைந்துள்ளது.

தற்போது நாளுக்கு நாள் தங்க விலை மேலும் சரிவடையக்கூடிய நிலைமை இருப்பதால், தங்க வியாபாரிகள் நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலை 24 கரட் 160,000க்கும் குறைவாகவும், 22 கரட் 150,000க்கும் குறைவாகவும் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: