பண அட்டை கொடுக்கல் வாங்கல்களை தீவிரமாக கண்காணிக்கும் வங்கிகள்  

கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டை ஊடாக இடம்பெறும் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களை வர்த்தக வங்கிகள் தீவிரமாக கண்காணிக்கவுள்ளன.

சிரேஷ்ட வங்கியியலாளர் ஒருவரை மேற்கோள்காட்டி த மோர்னிங் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பண அட்டைகள் ஊடாக வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களுக்கு நிலவிவந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது.

எனினும் வரம்பு மீறிய நிதிப்பரிமாற்றம் இடம்பெறுகிறதா? என்ற விடயத்தை வங்கிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது நாளொன்றுக்கு 3000 டொலர் வரையில் கடனட்டையூடாக செலவிட முடியும் எனவும், அதனை வங்கியுடன் தொடர்பு கொண்டு அதிகரித்துக் கொள்ளவும் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Please follow and like us: