இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழந்த ஆஸி.

இந்திய அணியை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றியீட்டியமையினால் அவுஸ்திரேலியா, இந்த ஆண்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
எனினும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் யார் மோதப் போகின்றார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலத்தில் (2021-23) அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அவர்கள் விளையாடிய 18 டெஸ்டில் 11 வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந் நிலையில் அவர்களின் இந்த அண்மைய வெற்றியனது அனுபவமிக்க வலது கை சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியானின் சிறந்த பந்துவீச்சு செயல்திறனால் கிடைக்கப் பெற்றுள்ளது.
அவர் இந்தியாவுடனான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 11 விக்கெட்டுகளை எடுத்தார்.
எவ்வாறெனினும் இந்த வெற்றி இவ்வாண்டுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு 68.52 புள்ளிகளை குவிக்க உதவியுள்ளது.
அதேநேரம் இந்தியா 60.29 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் அடுத்த போட்டி லண்டன் ஓவலில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அவர்களின் அடுத்த கட்டத்தை முடிவு செய்யும்.
அகமதாபாத்தில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வெற்றிபெற்றால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டியில் தனது இடத்தை இந்தியா உறுதி செய்யலாம்.
இதேவேளை இம்மாதம் நியூசிலாந்திற்கு எதிராக இலங்கைக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கை முன்னெடுக்கும்.
எஞ்சியுள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-23) போட்டிகள்:
இந்தியா – ஆஸ்திரேலியா (நான்காவது டெஸ்ட்) – அகமதாபாத், இந்தியா, மார்ச் 9-13
தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் (இரண்டாவது டெஸ்ட்) – ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா, மார்ச் 8-12.
நியூசிலாந்து – இலங்கை (முதல் டெஸ்ட்) – கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து, மார்ச் 9-13.
நியூசிலாந்து – இலங்கை (இரண்டாவது டெஸ்ட்) – வெலிங்டன், நியூசிலாந்து, மார்ச் 17-21